Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2023

குருந்தூர்மலைக்கு வரும் கம்மன்பில –எதிர்ப்பினை வெளிப்படுத்த தமிழர்கள் தயார்!

முல்லைத்தீவில் அமைந்துள்ள குருந்தூர்மலைக்கு சிங்கள கடும்போக்குவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருவதால் தமிழ் மக்கள் அஞ்சி ஒடுங்கமாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையின் பௌத்த மேலாதிக்கம் கொண்டவர்களாலும்,குடும் போக்கு மதவாதிகளாலும் பேசப்படும் விடையமாக குருந்தூர்மலை மாறியுள்ளது. நீதிமன்ற கட்டளையினை மீறி கட்டிமுடிக்கப்பட்ட குருந்தூல் மலையில் அகழ்வு ஆராச்சிபணியினை அன்று தொல்பொருள் திணைக்கள…

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த பட்டதாரி!

முல்லைத்தீவு குமுழமுனை 7 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கிழக்கு பல்கலைக்கழக பட்டதாரியும் குமுழமுனை மகாவித்தியாலய பழைய மாணவனுமான சதாசிவம் முரளிதரன் 18.06.23 அன்று அகாலமரணம் அடைந்துள்ளார். அன்னாரின் இறுதி நிழக்வு 20.06.23 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று உடலம் நல்லடக்கத்திற்காக தாமரைக்கேணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

முல்லைத்தீவில்- அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோம்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது. வட மாகாணத்தில் தற்போது அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை, வன்முறையும் மோதல்களும், தற்கொலை, கல்வியில் இடைவிலகல் , சிறுவர் தொழிலாளர்கள் எனப் பல்வேறு…

புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது!

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் இன்று 19.06.23  அதிகாலை இடம்பெற்றுள்ளது.புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்டுவதற்காக சாரணபோத்தல்கள் மற்றும் பூசைக்குரிய பொருட்களுடன் மண்வெட்டி சவல் என்பனவற்றை பயன்படுத்தி புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் பூசை நடத்தி புதையல் தோண்ட முற்பட்ட வேளை முல்லைத்தீவு பொலீசாருக்கு…

இளவயதினரின் உயிரிழப்பு சம்பவங்களால் கதறும் குடும்பங்கள்!

அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்…

கிளிநொச்சியில் காணாமல் போனவர் மல்லாவியில் அடித்து கொலை!

முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து கடந்த 17.06.23 னெடறு சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார் துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே  இவர் காணாமல் போயிருந்ததாகவும்,  இவர் ஏற்கனவே கிளிநொச்சி…

ஆசிரியர் புத்தகம் வெளியிடுவதற்கும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்

கவிஞர் சோமையா சுதர்சனின் குருதி படிந்த நிலம் கவிதைத்தொகுப்பு நூல் 18.06.23 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தினை சேர்ந்த ஆசிரியரான கவிஞர் சோமையா சுதர்சனின் குருதி படிந்த நிலம் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு  18.06.23 அன்று மாலை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போது தனது…

முல்லைத்தீவில் கடலில் வெளிச்சம் பாச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கை தொடர்கின்றது முறைப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 17.06.23 இன்று பயணம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவரது அமைச்சின் கீழான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் சந்தித்து கலந்துரையாடி சில தீர்;மானங்களை எடுத்துள்ளார்.அந்தவகையில், வட்டுவாகல் பிரதேச கடற்றொழிலாளர்களின் மீன்பிடி இறங்கு துறைக்கு செல்வதற்கு பொருத்தமான வீதியைப் புனரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்கரை வீதி…

கறுவா செய்கைக்கு சிறந்த மண் முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் கறுவாசெய்கையினை மேற்கொள்வதற்கு சிறந்த மண் மற்றும் காலநிலை காணப்படுவதாக கறுவா ஆராச்சி  நிலையத்தினால் பரிந்துரை செய்துள்ளார்கள். இலங்கையின் வடக்கிலும் கறுவா செய்கையினை மேற்கொள்ளலாம் என கறுவா ஆராச்சி நிலையம் பரிந்துரைசெய்துள்ளது. கறுவாகச் செய்கையை வீட்டுத் தோட்டமாக சிறிய அல்லது பெரிய அளவில் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள்  பங்குகொண்ட கலந்துரையாடல் ஒன்று 16.06.23 வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு…

முள்ளியவளையில் கஞ்சாவுடன் இருவர் கைது!

முள்ளியவளை தண்ணீரூற்று பகுதிகளில் காஞ்சா வாடிக்கையாளர்களிடம் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முள்ளியவளை பொலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 16.06.23 நேற்று மாலை கஞ்சாபாவனையில் ஈடுபட முயன்ற இதுவரை கைதுசெய்துள்ளார்கள். ஹிச்சிராபுரம்,மாமூலைப்பகுதிகளில் குஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளார்கள். ஹிச்சிராபுரம் பகுதியில் வயோதிபர் ஒருவர் மூன்று கிராம் கஞ்சாவினை தனது…