Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு பயணம்!

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று 22.06.23 காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தினரும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று…

மாங்குளத்தில் ஆயிரம்கோடிரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலை!

வடமாகாணம் போரால் பாதிக்கப்பட்ட மாகாணம். இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர், போரால் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் என பலர் உள்ளனர். போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களில்…

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக்கு தீர்வுகாண நடமாடும் சேவை!

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நோக்கில் ஜனாதிசெயலகத்தின் ஏற்பாட்டில்மாவட்ட செயலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. போரின்போது உயிரிழந்தவர்கள் சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டுகொடுப்பனவும்,திருமணபதிவு சான்றிதழ்,பிறப்பு பதிவு சான்றிதழ்,தேசிய அடையாளஅட்டை இதுவுரை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்களும் அன்று பெற்றுக்கொள்ளலாம், இது இல்லாதவர்கள் தற்போது தங்கள் வசிக்கும் பிரதேச…

முல்லைத்தீவில் வாகன புத்தகங்கள் ஒரோநாளில் பெற்றுக்கொள்ளலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளது இந்த சேவையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவையினையும் பெற்றுக்கொள்ளலாம்,வாகனங்களுக்கான பத்தகங்கள்மற்றும் உடமை மாற்றும் செயற்பாடுகள் என்பன உடன் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுவரை விண்ணப்பித்தும் உடமை மாற்று மற்றும் வாகன புத்தகங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் சென்று…

முல்லைத்தீவு மாவட்டத்தில் உல்லாசபயணங்களை விருத்திசெய்ய ஏற்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கான பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவேண்டிய தேவை உள்ள நிலையில் எதிர்வரும் யூலை மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளார். அந்த நிலையில் முல்லைத்தீவு மக்களின் பொழுதினை போக்காட்டுவதற்காக பகுதிஅளவில் பூர்த்திசெய்யப்பட்டுள்ள பொழுது போக்குமையத்தினை திருத்துவதற்கு நிதி உதவியினை…

படையினரின் அயராத பங்களிப்புடன் கட்டப்பட்ட குருந்தூர்மலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் இதேவேளை இராணுவத்தினரின் பங்களிப்புடனேயே குறித்த விகாரை பணி இடம்பெற்றது என்பதை அங்கு புதிதாக அமைக்கப்பட்ட கல்வெட்டுமூலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த குருந்தூர் மலை பிரதேசத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு இங்கு வருகைதருபவர்களை வாகனங்களை பதிவு செய்துவருகின்றனர் இதன்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1617 குடும்பங்களுக்கு காணிகளுக்கு பத்திரம் இல்லாத நிலை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் காணிகளுக்கான பத்திரங்கள் இல்லாத நிலையில் காணப்படுகின்றார்கள் இந்த நிலையில் எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ள நடமாடும் சேவையில் காணி பத்திரங்கள் இல்லாத மக்களுக்கு பேமிட் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. ஏற்கனவே காணிகளுக்கு அழிப்வு உறுதி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கான அழிப்பு உறுதிகளும் நடமாடும் சேவை…

குருந்தூர்மலையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியினை விடுவிக்ககேரி கவனயீர்ப்பு!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில புதன்கிழமை விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். கம்மன்பிலவின் வருகைக்கு முன்னதாக குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு திட்டமிடப்பட்ட…

முல்லைத்தீவு மாவட்ட பொலீசாரின் ஏற்பாட்டில் குருதி கொடை நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் திணைக்களங்களின் ஏற்பாட்டில் குருதிகொடை வழங்கும் நிகழ்வு ஒன்று 20.06.23 இன்று முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியேர் இதில் குருதி கொடை செய்துள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு,முள்ளியவைள,கருநாட்டுக்கேணி,மாங்குளம்,ஒட்டுசுட்டான்,ஜயன்கன்குளம்,நெட்டாங்கண்டல், ஆகிய பொலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய 120 வரையா பொலீஸ் உத்தியோகத்தர்கள் குருதி கொடை வழங்கியுள்ளார்கள்…

முல்லைத்தீவில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவினர் 120 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி!

பெண்கள் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால நிவாரணக் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் முக்கிய கலந்துரையாடல் இன்றையதினம் (20.06.23 ) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக…