Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2023

வற்றாப்பளைக்கு வந்துவிட்டு சென்ற இளைஞன் விபத்தில் பலி!

யாழ்ப்பாணம் கொடிகாமம் வரணி பகுதியில் அதிகாலை 2 மணியளவில் மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி குடத்தனை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாப்பளைக்குச் சென்று திரும்புகையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வற்றாப்பளை பொங்கலில் மாலை வரை 17 நகை கொள்ளை சம்பவங்கள்!

பல இலட்சம் பக்த்தர்கள் கலந்துகொள்ளும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்வு இன்று 05.06.23 சிறப்புற நடைபெற்றுவருகின்றது. வடக்கு கிழக்கிலயே பல இலட்சம் பக்கதர் ஒரே நாளில் ஒன்றுகூடி வழிபடும் தலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை நிகழ்த்தும் அதிசய ஆலயம் என்ற பெருமையோடு முல்லைத்தீவு நந்திக் கடலோரம்…

நந்திக்கடலை பாதுகாத்த கண்ணகி மாட்டுவண்டில் சாவரி சங்கம்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்விற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள்ஒன்று கூடுவது வழமை இந்த மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் பொலீத்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்கள் கடந்த காலங்களில் நந்திகடலில் கலந்து நந்திக்கடல் அசுத்தமாக்கப்படுவதுடன் அதில்வாழும் கடல் உயிரினங்களுக்கும் தீங்குவிளைவிக்கும் செயற்பாடாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் நந்திக்கடலை பாதுகாக்கும் நோக்கில் வற்றாப்பளை…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரை மருதங்கேணி பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக…

நாகஞ்சோலையில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் 05.06.23 இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட…

கஜேந்திரகுமாரை தாக்கிவிட்டு தப்பிஓடிய புலனாய்வாளர்-சுடவந்தார்களா?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தாக்கிவிட்டு புலனாய்வாளர் ஒருவர் தப்பிஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவாகியள்ளது. இதனால் அந்த இடத்தில் பதட்டமான நிலை உருவாகியுள்ளது.இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர்…