Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2023

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று 12.06.23 இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது மதுபோதையில் உந்துருளியில் பயணித்த இளைஞர்கள் இருவர் அதே திசையில் மிதிவண்டியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த விபத்தில் படுகாயமடைந்த…

புதையல்-பலிகொடுக்க கொண்டு சென்ற சேவலும் தோண்டமுற்பட்ட 8பேரும் சிறையில் அடைப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் கடந்த 05.06.23 அதிகாலை இடம்பெற்றுள்ளது.முள்ளியவளை கணுக்கேணியினை சேர்ந்த ஒருவரும் பூதன்வயல் பகுதியினை சேர்ந்த ஒருவரும் மற்றும் நொச்சியாகம,ராஜாங்கனை, சாலியஅசோகபுர,அம்பலாந்தோட்டை,தபுத்தேகம பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்….

மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை?

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை தொடர்ந்து வருகின்றது முல்லைத்தீவு  மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வவுனியா 67 கிலோமீற்றர் தொலைவிலும்,  கிளிநொச்சி 71 கிலோமீற்றர் தொலைவிலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…

விவசாயிகளுக்கான மானியஉரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை!

நாட்டில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு மானிய உரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை மே மாத இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என விவசாய துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கான மானிய உரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடடிக்கை 12.06.23 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன்குளம்,உடையார்கட்டு கமநலசேவை திணைக்களத்தின் இன்று(12) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது…

முல்லைத்தீவில் MPஇல்லாதத்திற்கு இதுபோன்ற சம்பங்களும் காரணமாக அமைந்துள்ளது!

புதுக்குடியிருப்பில் குளத்தின் நிலம் ஆக்கிரமிப்பு அரச திணைக்களங்கள் ஓரவஞ்சகம்-கிராம மக்கள் குற்றச்சாட்டு! ; புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மந்துவில் கிராமத்தின் சனசமூக நிலையத்தின் நிர்வாக உறுப்பினர்  ஜேயதாஸ் நிர்மலகாந் 10.06.23 இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள். இவருடன் கமக்கார அமைப்பினர்,பெண்கள் அபிவிருத்தி சங்கத்தினர்,விளையாட்டு கழகத்தினர் உடன்…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு புலிமச்சிநாதகுளம் பகுதியில் வயல் வெளியில் இறந்த நிலையில் யானை ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது வயல் பார்வையிட சென்றவர்களால் இறந்த நிலையில் யானை அடையாளம் காணப்பட்டு, கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேச வாசிகள் தகவல் வாங்கியுள்ளனர் இதேவேளை இறந்த யானை பெண் யானை எனவும் ,அது 30-35 வயதினை…

சுதந்திரபுரம் படுகொலையின் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 10 ஆம்திகதி இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று 06.10.23 உணர்வு பூர்வமாக இடம்பெற்றது…

முல்லைத்தீவு மவட்டத்தில் 29 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விடுவிக்கபடவுள்ளது-க.கனகேஸ்வரன்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளபாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் 19 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் வனவளத்திணைக்களத்தின் காணி விடுவிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்முல்லைத்தீவு…

மூங்கிலாறு வடக்கில் இயற்கை உரதொழில்சாலை திறந்துவைப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கில் உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தின் இயற்கை உரதொழில்சாலை இன்று 07.06.23 திறந்துவைக்கப்பட்டுள்ளது. உடையார் கட்டு விவசாயிகள் கூட்டுறவு சங்க தலைவர் சே.யோகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கமலேஸ்வரன் சிறப்பு விருந்தினர்களாக வடமகாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும்,கூட்டுறவு சங்கங்களின்…

முல்லைத்தீவில் 1113 மீனவர்களுக்கு மண்ணெண்ணைய் வழங்கும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் மானிய எரிபொருளான மண்ணெண்ணைய் வழங்கும் நடவடிக்கை இன்று 07.06.23 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணையின் தற்போதைய விலை 245 ரூபாவாக காணப்படுகின்றது இந்த நிலையில் படகு ஒன்றிற்கு 75 லீற்றர் மண்ணெண்ணைய் கடற்தொழில் அமைச்சின் ஊடாக இலவசமாக வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் கொக்கிளாய் வரையான கரைNயுhர…