Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

jaffna

சிறப்பாக இடம்பெற்ற இயந்திரம் மூலம்  நெல் நாற்று  நடுகை தொடர்பான கருத்தரங்கு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான இயந்திரம் மூலம்  நெல் நாற்று  நடுகை தொடர்பான கருத்தரங்கு  நேற்று(06)  ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனத்தின்  நிதி அனுசரணையோடு முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்   திருமதி யாமினி சசீலன் அவர்களது ஒழுங்குபடுத்தலில் குறித்த இயந்திரம் மூலம்  நெல்…

முல்லைத்தீவில்-எதிர்வரும் 8 ஆம் திகதி பாரிய போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் 08.03.2024 அன்று 7 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது இந்த நிலையில் எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இன்று 06.03.24…

2 மணிநேர துண்டிப்பு 100 மில்லியன் டொலர் நிதி இழப்பு!

நேற்று இரவு சமூகவலைத்தளங்கள் இரண்டு இரண்டு மணிநேரம் துண்டிக்கப்பட்டதால் அதன் பயனாளர்கள் பலர் குழப்பத்தில் மூழ்கினார்கள் மெட்டா நிறுவனத்தின் வகிபாகமாக காணப்படும் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடங்கின மெட்டா நிறுவனம் வருமானத்தில் பெரும் பகுதியினை விளம்பரங்கள் மூலம் உருவாக்கிவருகின்றது இரண்டு மணிநேர முடங்கலால் மெட்டா நிறுவனத்திற்கு 100 மில்லியன் டெலர் நிதி இழப்பு…

சாந்தனுக்கு மாங்குளத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி விடுதலையாகி திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் உடல், சிவப்பு மஞ்சல் வர்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வடக்கின் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட…

புதுக்குடியிருப்பில் பண்பாட்டினை போற்றிடும் பாரிய கலைவிழா!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் புதுவையின் பண்பாட்டினை போற்றிடுவோம் என்ற தொனிப்பொருளில் பாரிய கலாச்சார போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர் இன்று 03.03.2024 முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள். இந்த ஊடக சந்திப்பில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஆலோசகர் தவசீலன், சமூகசேவை உத்தியோகத்தர் சஞ்சீவன்,முன்னாள்…

புதுக்குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கரித்தாஸ் குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது 74 அகவையுடைய அதே பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உடலமாக காணப்பட்ட நிலையில் பிரதேச வாசிகள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணைகளை…

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை முல்லைத்தீவு நகரில்!

வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரில் இடம்பெறவுள்ள நிலையில் கால்நடை வளப்போரிடம் அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது வடமாகாண துவிசக்கரவண்டி ஓட்ட போட்டி நாளை (03) முல்லைத்தீவு நகரிருந்து ஆரம்பமாகி ஆண்கள் மாங்குளம் வரை சென்று திரும்புவதோடு பெண்கள் கருவேலங்கன்டல் வரை சென்று திருப்பும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை (3/3/2024) நடைபெறவுள்ளது…

அமரர் ஜேம்ஸ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சென்யூட்ஸ் விளையாட்டுக்களகம் நடத்தும் அமரர்ஜேம்ஸ் ஞாபகர்த்த வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 9 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டி 03.03.2024 அன்று முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் சிறப்புற நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் திரு.ஜஸ்வர் உமர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக்குழு…

சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன!

சட்டவிரோத மின்சார வேலி- கால்நடைகள் இறக்கின்றன –பண்ணையாளர்கள் ஆதங்கம் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்விளான் பகுதியில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் சிக்கி தமது கால்நடைகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் தமது வாழ்வாதாரமான கால்நடைகள் குறித்த சட்டவிரோத மின்சார வெளியில் சிக்கி நோய்வாய் படுவதாகவும்ஓரிரு நாட்களில் அவை இறந்து விடுவதாகவும் தெரிவித்த…

சாந்தனின் மறைவிற்கு முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி!

சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுதந்திரபுரம்,விசுவமடு போன்ற பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளது. தாயக செயலணியின் ஏற்பட்டில் இந்த கண்ணீர் அஞ்சலி பனர்கள் கட்டப்பட்டுள்ளன. பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பசுந்தளிர் பெற்றெடுத்த மண்ணுக்கென 33 வருடமாய் சிறையினிலே தம்மை…