Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று 06.05.2024 அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடைபரவி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று பாக்குத்தெண்டல் நடைபெற்றுள்ளது.

பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க தெய்வமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வை ஆலயத்துடன் தொடர்புடைய வீடுகளுக்கு சென்று தெரிவிக்கும் சம்பிரதாய உற்சவமே பாக்குத்தெண்டல் ஆகும்
பாக்குத்தொண்டலுக்கு சென்றவர்கள் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்ததும் அங்கு அம்மன் சன்னிதானத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

பக்குத்தெண்டல் நடைபெற்று ஏழாவது நாளில் முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்;த்தம் எடுத்துவந்து காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் உப்புநீரில் விளக்கேற்றி கண்ணகி அம்மனின் பொங்கல் ஆரம்பமாகின்றமை தொன்று தொட்டவளமை.

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட் கிழமை கடல்நீர் தீர்த்தம் எடுத்தல் நிகழ்வும் அதனை தொடர்ந்து ஏழுநாட்கள் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்நிதானத்தில் அணையா விளக்காக எரிந்து எதிர்வரும் 19 ஆம் திகதி காட்டாவிநாயகர் பொங்கல் இடம்பெற்று 20 ஆம் திகதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *