Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ்!

ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓடு,செங்கல் தயாரிக்கும் ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழில்சாலை போரிற்கு பின்னர் இயங்காதநிலையில் காணப்படுகின்றது.

போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழில்சாலையாக ஓடு,செங்கல் என்ப உற்பத்தி செய்யப்பட்டது இதனை நம்பி பல குடும்பங்கள் வேலை செய்தார்கள் அருகில் உள்ள கூழாமுறிப்பு குழத்தில் கழிமண் எடுக்கப்பட்டு அங்கு உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் போரிற்கு பின்னர் அந்த தொழில்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியலுக்காக பல அமைச்சின் கீழ் கொண்டு புனரமைப்பு செய்யப்படும் இயங்கநடவடிக்கை எடுக்கப்படும் என பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்கள்.

அதன் பின்னர் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தானத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தென்னிலங்கையில் உற்பத்திசெய்யப்படும் ஓடுகள் அங்கு விற்பனையாகிவருகின்றன ஆனால் அங்கு இயந்திரங்கள் எவையும் செயற்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழில்சாலை இராணுவ சமூகசேவை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இராணுவ தொழிலாளர்கள் மற்றும் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனத்தின் பங்களிப்புடன் பொதுமக்கள் நலனுக்காக கூழாமுறிப்பு ஓட்டுத்தொழில்சாலை விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 27.03.2024 அன்று இதனை இலங்கை இராணுவத்தளபதி சென்று பார்வையிட்டு இயங்குவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது குறித்த பகுதிக்கு இலங்கை இராணுவத்தளபதி செல்லவுள்ள நிலையில் குறித்த ஓட்டுத்தொழில்சாலையினை சூழஉள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *