மாங்குளத்தில் ஆயிரம்கோடிரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலை!


வடமாகாணம் போரால் பாதிக்கப்பட்ட மாகாணம். இங்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளம் விதவைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசேட தேவையுடையோர், போரால் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டோர் என பலர் உள்ளனர். போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.
இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டு வடமாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட புனர்வாழ்வு வைத்தியசாலையினை தற்போரைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தொடங்கிவைக்கவுள்ளார்.

2015 ஆம் ஆண்டு 1300 மில்லியன் ரூபா செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையி;ல் எதிர்வரும் யூலை மாதம் முதற்பகுதயில் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அவர்கள் திறந்துவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *