முல்லைத்தீவில் வாகன புத்தகங்கள் ஒரோநாளில் பெற்றுக்கொள்ளலம்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் யூலை முதல் வாரத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளும் நடமாடும் சேவை ஒன்று இடம்பெறவுள்ளது இந்த சேவையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து சேவையினையும் பெற்றுக்கொள்ளலாம்,வாகனங்களுக்கான பத்தகங்கள்மற்றும் உடமை மாற்றும் செயற்பாடுகள் என்பன உடன் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதுவரை விண்ணப்பித்தும் உடமை மாற்று மற்றும் வாகன புத்தகங்களை பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் சென்று விண்ணப்பங்களை கொடுப்பதன் ஊடாக நடமாடும் சேவை அன்று தங்கள் பதிவு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கவீனங்களை இழந்த நிலையில் அதிகளவில் வாழ்கின்றார்கள் மாற்று வலுஉடையவர்கள் சாரதி அனுமதிபத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனை விட எழுத்தறிவு இல்லாதவர்களும் தங்கள் வாகன அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்காக வாய்மொழி பரீட்சை நடத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *