முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள பின்தங்கிய பாடசாலையான கோட்டை கட்டிய குளம் மகாவித்தியாலயத்தின் சாதனையாளர்கள் கௌரவிப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் திருமதி அற்புதராணி கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் சாதனையாளர்களாக க.பொ.த சாதாரணதர பரீட்சையில் பாடசாலை வரலாற்றில் முதல்தடவையாக 9ஏ சித்தி பெற்ற தோ.நிதுயா, 8ஏ,பி சித்திபெற்ற ர.தமிழன்பன் மற்றும் வடமாகாண தமிழ்மொழித்தினப்போட்டியில் சிறுகதையில் ஆக்கப்பிரிவில் 5 இல் மூன்றாம் இடத்தினை பெற்ற ந.சங்கவி ஆகியோர் பாடசாலை சமூகத்தினரால் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

