முத்துஜயன்கட்டில் உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது வீட்டில் அஞ்சலிக்காக அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி வீட்டில் அதிகளவான பொலிசார் கடமையில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த இளைஞரது உடலம் மருத்துவ பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம்(10) இரவு 11 மணியளவில் அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ள நிலையில் உடலம் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
குறித்த இளைஞரின் இறுதிக்கிரியைகள் தற்போது இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் இன்றைய தினம்(11) பெருமளவான மக்கள் அரசியல் பிரமுகர்கள் வருகைதந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன் காதர் மஸ்தான் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தொழிலாளர் உறுப்பினர்கள் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இளைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்
இதேவேளை விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இறுதிக்கிரியைகள் தற்போது நடைபெற்று உடலம் அடக்கம் செய்யப்படவுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒருவர் காணாமல் போயிருந்தார் இந்நிலையில் காணாமல் போனவர் 08.08.2015 அன்று முத்துஜயன்கட்டு குளத்தில் இருந்து உடலமாக மீட்கப்பட்டிருந்தார் இவரையும் இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இந்நிலையில் குறித்த இளைஞர்களை இராணுவ முகாமுக்கு அழைத்த குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று இராணுவ வீரர்கள் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்திய போது இவர்களை 19.08.2025 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஜயன்கட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 13 SLNG இராணுவ முகாமை விட்டு இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்றனர்
இந்நிலையில் குறித்த இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த சில பொருட்களை இராணுவத்தினர் முகாமைசுற்றியுள்ள ஜீவநகர் கிராம இளைஞர்களுக்கு வழங்கி அதை அவர்கள் விற்றுவிட்டு இராணுவத்தினருக்கு போதைப்பொருட்களை வாங்கி வந்து வழங்குகின்ற செயற்ப்பாடு அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது
குறித்த கிராமத்தில் வாழ்கின்ற இளைஞர்கள் தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் இவ்வாறாக இராணுவத்தினரால் விற்கப்படுகின்ற பொருட்களை பெற்று வெளியில் கொண்டு சென்று விற்றுவிட்டு அவர்களுக்கு தேவையான போதை பொருட்களையும் வழங்கி வந்திருக்கின்றார்கள்
இந்நிலையில் கடந்த 07.08.2025 அன்று மாலை 7 மணி உயிரிழந்த இளைஞரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த இராணுவத்தினர் அன்றிரவு தமது முகாமுக்கு வருமாறும் சில பொருட்களை தமக்கு வழங்குவதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்து இருக்கின்றார்கள்
இதன் அடிப்படையில் உயிரிழந்த இளைஞன் உட்பட ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றபோது இளைஞர்களிடம் இரும்பு கட்டில்கள் தகரங்கள் உட்பட சில பொருட்களை குறித்த இளைஞர்களிடம் வழங்கியுள்ளனர்
இவ்வாறு பொருட்களை பெற்றுக் கொண்டிருந்த போது முகாமில் இருந்த பல இராணுவத்தினர் சேர்ந்து பொருட்களை பெறச் சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்
இதன்போது குளத்தில் குதித்து மூவர் தப்பி வந்துள்ளனர் மற்றையத இருவரில் ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அங்கு சென்ற பொது மக்களால் இராணுவத்துடன் முரண்பட்டு அவர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளார்
மற்றைய ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் உறவுகள் அவரை இராணுவத்தினர் கொலை செய்து விட்டதாக தெரிவித்திருந்தனர்
இவ்வாறான பின்னணியில் மற்றைய இளைஞர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு குளத்தில் போடப்பட்டிருக்கலாம் என்ற சிலர் சந்தேகம் வெளியிட்ட நிலையில் 08.08.2025 முழுவதும் மக்கள் குளத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர் எனினும் குளத்தில் எந்த தடயமும் காணப்படவில்லை
இந்நிலையில் நேற்று முன்தினம் (09) காலை முத்துஜயன்கட்டு குளத்தில் குறித்த காணாமல் போன குடும்பஸ்தரின் உடலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் உடலத்தை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது