முல்லைத்தீவு மாவட்டத்திலும் கறுவாசெய்கையினை மேற்கொள்வதற்கு சிறந்த மண் மற்றும் காலநிலை காணப்படுவதாக கறுவா ஆராச்சி நிலையத்தினால் பரிந்துரை செய்துள்ளார்கள்.
இலங்கையின் வடக்கிலும் கறுவா செய்கையினை மேற்கொள்ளலாம் என கறுவா ஆராச்சி நிலையம் பரிந்துரைசெய்துள்ளது.
கறுவாகச் செய்கையை வீட்டுத் தோட்டமாக சிறிய அல்லது பெரிய அளவில் செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பங்குகொண்ட கலந்துரையாடல் ஒன்று 16.06.23 வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமசேவையாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கறுவாசெய்கையில் விருப்பம் கொண்ட பயனார்கள் 30 பேர் இதன்போது கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமறித்துள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதி பொருளாக காணப்படும் கறுவாக தெற்கில் சில இடங்களில் செய்கை பண்ணப்பட்டு வந்தாலும் வடக்கில் கறுவா செய்கைக்கான நில அமைப்பும் மற்றும் காலநிலை அமைப்பும் காணப்படுவதாகவும் வடபகுதி மக்களுக்கு இதனை அறிமுகம் செய்துள்ளஅதேவேளை இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால், இந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரபுரம்,உடையார் கட்டு பகுதிகளை சேர்ந்த 30 வரையான விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளார்கள் கலந்து கொண்டவர்களுக்கு முதற்கட்டமாக கறுவா விதையும் விதைக்கான பைக்கட்டுக்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன