முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் வேம்படி நாகதம்பிரன் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 19.06.23 அன்று சிறப்புற நடைபெறவுள்ளது.
19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு பொங்கல் பூசைகள் ஆரம்பமாகி 11.54 தொடக்கம் 1.24 வரையுள்ள சுபவேளையில் பொங்கல் தின சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு நாகதம்பிரானுக்கு பால்,பழம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து வளர்ந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பொங்கல் நிகழ்வின் இரவு கலை நிகழ்வாக மகேந்திரன் அண்ணாவியாரின் மாலைக்கு வாதாடிய மைந்தன் புராண சரித்திர நாடகம் இடம்பெறவுள்ளதுடன் அதிகாலை வேளை நாகதம்பிரான் ஆலயத்தின் கோழி ஏலத்தில் விடும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.