புதுக்குடியிருப்பு புதுநகர் சிவன் கோவில் வருடாந்த மகோற்ஷப விஞ்ஞபனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி சமேத கல்யாண சுந்தரரேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த சோப கிருது வருட மகோற்ஷவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27.06.23 பூங்காவன திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது.

முல்லைமா நகரில் புகழ்பூத்த புதுக்குடியிருப்பு எனும் புண்ணிய சேத்திரத்தில் கோயில் கொண்டெழுந்தருளி அருளாட்சி புரியும் சிவகாமிசுந்தரி சமேத கல்யாண சுந்தரரேஸ்வரர் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான சோப கிருது வருடம் 17.06.23 திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு ஞானவேலாயுதசுவாமி ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு கிரியைகள் ஆரம்பமாகி கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

23.06.23 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழாவினை தொடர்ந்து 24.03.23 சனிக்கிழமை சப்பறதிருவிழாவும்,25.06.23 ஞாயிற்று கிழமை தேர்த்திருவிழாவும்,26.06.23 தீர்த்தத்திருவிழாவும் 27.06.23 பூங்காவன திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது. தினமும் மதியம் அன்னதானம் சிறப்பாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar

More for you