புதுக்குடியிருப்பு மண்ணில் பாரிய முதலீட்டுடன் -தாயகம் உற்பத்தி நிலையம்!

நம் தாயகம் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு_புதுக்குடியிருப்பு பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு கிடைத்த யோகம் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நம் தாயகம் உற்பத்தி நிலையம் நேற்று முன்னால் (12) புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் சிலவற்றுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் குறித்த உற்ப்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

குறிப்பாக உள்ளூரில் கிடைக்கும் உற்ப்பத்தி பொருட்களை முடிவுப் பொருட்களாக்கி உள்நாட்டில் மட்டுமன்றி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதனூடாக உள்ளூர் உற்ப்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்ப்படுத்தி கொடுப்பதோடு இந்த உற்ப்பத்தி நிலையம் ஊடாக இங்கு பணிபுரிய உள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த கூடிய வகையிலும் இந்த உற்ப்பத்தி நிலையம் செயற்படவுள்ளது

இந்த நம் தாயகம் உற்பத்தி நிலையம் நேற்று மாலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டதை தொடர்ந்து பெயர்ப்பலகையினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார் தொடர்ந்து உற்ப்பத்தி நிலையத்தினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

குறித்த இந்த நிகழ்வின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆனந்தபுரம் கிராம அலுவலர் ஆனந்தபுரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்

நிகழ்வின் போது ஆனந்தபுரத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி பொதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது 

Tagged in :

Admin Avatar