விவசாயிகளுக்கான மானியஉரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை!

நாட்டில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு மானிய உரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை மே மாத இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என விவசாய துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கான மானிய உரத்திற்கான வவுச்சர் வழங்கும் நடடிக்கை 12.06.23 இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாண்டியன்குளம்,உடையார்கட்டு கமநலசேவை திணைக்களத்தின் இன்று(12) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் கமநல சேவை திணைக்களங்கள் ஊடாக விவசாயிகள் வவுச்சரினை பெற்று உரத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் உடையார் கட்டு கமநலசேவை திணைக்களத்தின்  கீழ் உள்ள 665 விவசாயிகளுக்கு வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உடையார் கட்டில் 1505 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கையினைமேற்கொண்ட 665 விவசாயிகள் கமநலசேவைதிணைக்களத்தில் இன்றில் இருந்து கட்டம் கட்டமாக வவுச்சரினை பெற்று உரத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுச்சர் வழங்கும் நிகழ்வு கமநலசேவை திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ர.மயூரன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதன்போது விவசாயிகளுக்கு வவுச்சர்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டயருக்கு 20 ஆயிரம் ரூபா வவுச்சர் மனியமாக வழங்கப்பட்டுள்ளது.

வவுச்சரினை பெற்றுக்கொண்டு கமநலசேவை திணைக்களத்தின் ஊடாக விவசாயிகள் உரத்தினை பெற்றுக்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியாரிடமும் உரத்தினை விவசாயிகள் வவுச்சரினை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar