பிரான்சில் இருந்து வருகைதந்த 200 பெண்கள் இலங்கைக்கு கிடைக்ககும் வரவேற்பு!

ரெய்ட் அமேசன்ஸுக்காக 200 வெளிநாட்டு பெண்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர். ரெய்ட் அமேசன்ஸ் மகளிர் சாகச விளையாட்டு விழா, நேற்று கண்டியில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்றும் 200 பெண்கள் அடங்கிய குழுவினர், பிரான்சில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரெய்ட் அமேசன்ஸ் என்பது பிரான்சில் இருந்து தொடங்கப்பட்ட ஒரு வருடாந்திர சாகச நிகழ்வாகும். இதன் 21 ஆவது பதிப்பு இலங்கையில் நடைபெறுகிறது.

இவ்வாறு வருகைதந்த பிரான்ஸ் நாட்டு பெண்களுக்கு கட்டுநாயக்கா சர்வதேவ விமான நிலையத்தில் வைத்து சிறப்பு வரவேற்புஏற்பாடு செய்யப்பட்டு நாட்டுக்குள் அழைத்துவரப்பட்டுள்ளார்கள்

இதில் பெண் தடகள வீராங்கனைகள் மலையேற்றம், மலை தொடர் துவிச்சக்கரவண்டியோட்டம், படகோட்டம், ஓட்டப்போட்டி மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு சகாசப் போட்டிகளில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் மற்றுமொரு முயற்சியாக இந்த நிகழ்வுகள் இம்முறை இலங்கையில் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tagged in :

Admin Avatar

More for you