புதுக்குடியிருப்பில் மாணவி மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலையில் மயங்கியநிலையில் மாணவி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

19.05.23 இன்று காலை புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இருந்து மத்திய கல்லூரிக்கு சென்ற மாணவி வீதியால் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இனம் தெரியாத இருவர் மாணவியின் முகத்தில் ஏதோ விசிறியுள்ளார்கள் இதனை பொருட்படுத்தாத மாணவி பாடசாலை சென்றுள்ள நிலையில் பாடசாலை மயங்கி வீழ்ந்தநிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

19 அகவையுடைய உயர்தரம் படிக்கும் பாடசாலை மாணவியே இவ்வாறு மயங்கி விழுந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவுமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் மருத்துவ பரிசேதனையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தற்போது பாடசாலை மாணவர்கள் கடத்தல் விவகாரம் பெற்றோரிடம் பேசு பொருளாக காணப்பட்டுள்ளது இந்த நிலையில் இவ்வறானசம்பவங்கள் உண்மையில் நடைபெற்றதாக என்பது தொடர்பில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *