முள்ளிவாய்க்கல் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்ய நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் ஊடக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தமக்களுக்காக பிதிர்கடன் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகிலஇலங்கை சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் நடராசா குணரத்தினம் ,செயலாளர் சிவப்பிரகாசம் சுரேஸ்,செந்தமிழ் ஆகமர் அட்சகர் ஆகியோர் இணைந்து முல்லைத்தீவு ஊடக அமைத்தில் 16.05.23 அன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் என்று சொல்கின்ற நீர்த்தார்சடங்கினை செய்வதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்நீர்த்த உறவுகளின் உறவுகள் தங்களின் பிதிர்கடனைசெய்துகொள்வதற்காக 18.05.23 அன்று காலை 7.00 மணியில் இருந்து முள்ளிவாய்க்கால் கப்பல் வீதி கடற்கரையில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு பிதிர்கடன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உறவுகள் அனைவரும் இந்த பதிர்கடன் செய்யமுடியும் தமிழ் மறைகள் ஓதப்பட்டு 15 தமிழ் அச்சகர்களால் பிதிர்கடன் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிதிர்கடன் செய்யாதவர்கள் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு பிதிர்கடன் செய்து உயிரிழந்த உறவுகளை திருப்திப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tagged in :

Admin Avatar