புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனத்தினை ஏற்றிசென்ற வாகனம் விபத்தினை ஏற்படுத்தியுள்ளது!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பேராற்று பகுதியில் விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தினை ஏற்றி சென்ற வாகனம் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீது மோதியதில் மூன்று சிறுவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
13.05.23 அன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் புதுக்குடியிருப்பில் வணிகநோக்கத்திற்கா வந்த பட்டா வாகனம் ஒன்று இரணைப்பாலை வீதியில் நாய்குறுக்கே பாய்ந்தவேளை வானம் பிரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த சம்பவம் 13.05.23 அன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது வானம் முற்றாக சேதமடைந்துள்ளது இதில் சேதமடைந்த பட்டா வாகனத்தினை மற்றும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வவுனியா சொன்று கொண்டிருந்த போது பேராறு பகுதியில் ஏற்றிசெல்லப்பட்ட பட்டா வாகனத்தின் மேற் கூடு காற்றினால் இடது பக்கம் இழுக்கப்பட்டு வானத்திற்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த பட்டாவகனத்தின் கூடு வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று மாணவர்களை மோதித்தள்ளிவிட்டு சென்றுள்ளது
இதன்போது 13 அகவையுடை சஜீவன்,15அகவையுடை சுதர்சிகா,10அகவையுடைய சர்மிலன் ஆகியோர் காயடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்கா யாழ்ப்பாணமருத்துவமனைக்கும் மற்றும் ஒருவர் வவுனியா மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள்.
வாகனத்தினை ஓட்டி சென்ற சாரதிதப்பிசென்றுள்ள நிலையில் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பதுக்குடியிருப்பு வீதிபோக்குவரத்து பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.