புதுக்குடியிருப்பில் சிறுமியை மயங்கவைத்து கடத்தல் முயற்சி இளைஞன் கைது!


புதுக்குடியிருப்பில் சிறுமி கடத்தல் முயற்சி கடத்த முற்பட்ட இளைஞர்கள் தப்பி ஓட்டம் ஒருவர்கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

13.05.23 இன்று காலை 7.00 கைவேலிப்பகுதியில் 10 அகவையுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் உந்துருளியில் கொண்டுசென்று இறக்கிவிட்ட நிலையில் வீதியில் உந்துருளியில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.

வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இளைஞனை அழைத்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
சத்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார் 23 அகவையுடைய 02 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியினை சேர்ந்த இளைஞனை கைதுசெய்துள்ளதுடன் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமியினையும் அவரது தாயாரினையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசென்று அங்கு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய சிறுமி மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சிறுமியின் தந்தை திருகோணமலையில் குடும்பத்தினை விட்டு வாழ்ந்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடத்தல் சம்பவத்தில் கைதான சந்தேக நபர் சமூகத்தில் நன்நடைத்த அற்றவர் என்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இளம் தயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த சிறுமியே இவ்வாறு கடத்த முயற்சித்தமை தொடர்பில் கிராமத்தில் பலர் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் உங்கள் பிள்ளைகளில் நீங்கள் அக்கறையாக இருங்கள்..

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *