16.04.2025 கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த ஒருவரையும் கடத்திய கஞ்சாவினையும் இராணுவத்தினர் மீட்டுள்ளார்கள்.
புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் இருந்து கன்டர் வாகனத்தில் சூழ்சிமமாக மறைத்துக்கொண்டு சுமார் 85 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவினை கடத்த முற்பட்ட வேளை இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வாகனம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்தபோது கஞ்சா மிட்கப்பபட்டுள்ளது.
சுமார்85 கிலேவிற்கு மேற்பட்ட கஞ்சா இவ்வாற கடத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்தவர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் கைதுசெய்யப்பட்ட நபரும் கஞ்சாவும் தர்மபுரம் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கஞ்சாவினை நிறை அளவிடும் பணியிலும் மேலதிக நடவடிக்கையிலும் தர்மபுரம் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.