முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழகத்தால் நடாத்தப்படும் புதுவருடக் கிண்ணத் தொடர் இந்த வருடம் 11வது வருடமாக சிறப்புற நடைபெற்றுள்ளது.
அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான போட்டியாக கடந்த 02.04.2025 அன்று தொடங்கிய உதைபந்தாட்ட போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 21 அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டு விலகல் முறையில் இறுதிப்போட்டிக்காக வட்டுவாகல் உதயசூரியன் அணியும்,இரணைப்பாலை சென்அன்ரனிஸ் அணியும் தெரிவாகி இறுதிப்போட்டி 15.04.2025 அன்று மாலை நடைபெற்றுள்ளது.
இறுதிச்சுற்றில் போட்டியிட்ட அணிகள் எந்த கோல்களும் போடாத நிலையில் இறுதியில் நடுவரின் தீர்ப்பிற்கு அமைய பனால்டிமுறையில் 5 கோல்களை போட்டு வட்டுவாகல் உதயசூரியன் அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது இரண்டாம் இடத்தினை இரணைப்பாலை சென்அன்ரனிஸ் அணி தனதாக்கியது.
21 அணிகள் கலந்துகொண்ட போட்டித்தொடரில் சிறந்த அணியாக ஒற்றுமை விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டுள்ளதுடன்,போட்டியில் மக்கள் மனங்கவர் வீரனாக வட்டுவாகல் உதயசூரியன் அணியினை சேர்ந்த அபிசன் அவர்களும், ஆட்டநாயகன் விருதினை இரணைப்பாலை சென்அன்ரனிஸ் அணியின் டயான் அவர்களும்,சிறந்த கோல்காப்பாளராக வட்டுவாகல் உதயசூரியன் அணியினை சேர்ந்த அஜித் அவர்களும் தொடரின் சிறந்த பின்கள வீரனாக ஒற்றுமை விளையாட்டுக்கழக வீரன் தமிழ்மாறன் அவர்களும் தொடர் ஆட்ட நாயகன் விருதினை வட்டுவாகல் உதயசூரியன் அணியின் இன்சாத் அவர்களும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
இறுதி போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திட்டமிடல் அதிகாரி வைத்திய கலாநிதி கை.சுதர்சன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன உப தலைவர் ரி.குறிஞ்சிக்குமரன் அவர்களும் முல்லை வலய உடற்கல்லி ஆசிரிய ஆலோசகர் கே.டிலான் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதமவிருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.



