அமைச்சர் கொடுத்த இந்திய இழுவை படகு கடலில் முல்லை கடலில்மூழ்கியுள்ளது!

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுளையும் போது கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகுள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட படகுகளை வடக்கினை சேர்ந்த மீனவ அமைப்புக்களுக்கு ஆழ்கடலில் தொழில்செய்தற்காக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடந்த வாரம் முல்லைத்தீவுமாவட்ட கடற்தொழில் சம்மேளனத்திற்கு முல்லைத்தீவு கடலில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட இந்திய இழுவைப்படகு ஒன்று முல்லைத்தீவு கடலுக்கு கொண்டுவரப்பட்டு கரையோரத்தில் தரித்து விடப்பட்டுள்ளநிலையில் கடந்த மூன்று காட்கள் காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு குறித்த படகு கடலில் மூழ்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அருள்நாதன் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளார்.

குறித்த படகு மீது யாரோ தாக்குதல் நடத்தி அல்லது சேதப்படுத்தியே படகு கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்

Tagged in :

Admin Avatar