Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மூங்கிலாற்றில் காற்றினால் வீடு தூக்கிவீசப்பட்ட குடும்பத்திற்கு உடனடி உதவிகோரல்!

புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு பகுதியில் வீசிய கடும் காற்று மழை காரணமாக தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வந்த இரண்டு குடும்பங்களில் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் அவர்கள் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் மூங்கிலாறு கிராமத்தில் வீசிய கடும் காற்றினால் இரண்டு தற்காலிக வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மற்றும் இரண்டு தற்காலிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வீடுகளில் வாழமுடியாத இரண்டு குடும்பங்களை நேற்று இரவு 22.04.23 கிராம அபிவிருத்தி சங்கம் உணவு வழங்கி பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைத்துள்ளார்கள்.

மனோகரன் நிவேந் என்ற மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பம் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டுத்திட்டம் கிடைக்காத நிலையில் தற்காலிக வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள் வீசிய கடும்காற்றினால் இவர்களின் வீட்டின் கூரை முற்றாக தூக்கி அயல் காணியில் வீசப்பட்டுள்ளன இதனால் இவர்கள் வீட்டில் வசிக்கமுடியாத நிலைகாணப்பட்டுள்ளது வீட்டில் இருந்த உணவுபொருட்கள் உடுபுடவைகள் அனைத்தும் மழையில் நனைத்து சேதமடைந்துள்ளன.

இவர்களுக்கான உடனடி தேவையான உணவு தங்குமிட வசதியினை கிராம அபிவிருத்தி சங்கம் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கவைத்து உணவினை வழங்கிவருகின்றார்கள் இவர்களுக்கு உடனடி உதவியினை செய்ய விரும்புவர்கள் அவர்களுடன் நேரடியா தொடர்பு கொள்ளுங்கள் 0761444529

மூங்கிலாறு கிராமத்தில் மற்று மொருவரான பாக்கியராசா கணேசபிள்ளை என்பவரின் தற்காலிக வீட்டின் மேல் பிலா மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்து மின்சார இணைப்பும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தின் வீட்டில் உறங்க முடியாத நிலையில் தகரங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீட்டின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது குடும்பம் கிராமஅபிவிருத்தி சங்க மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.இந்த குடும்பத்திற்காக உடனடி உதவிகளை மேற்கொள்ள விரும்பம் உள்ளவர்கள் 0742576975 இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும்.

இந்த இரண்டு குடும்பங்களின் நிலை அறிந்து உதவிசெய்யகூடிய தனி நபர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவர்களின் உடனடி தேவையினை கருத்தில்கொண்டு உதவியினை வழங்க முன்வருமாறு வேண்டுகின்றோம்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *