முல்லைத்தீவில் 86ஆயிரத்தி 869 வாக்காளர்களுக்கு ஏற்பாடு பூர்த்தி!

வன்னி தேர்தல் தொகுதியில் உள்ள மூன்று மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் ஒன்றாக காணப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமாக 86 ஆயிரத்தி 869 வாக்காளர்கள் காணப்படுகின்றாhக்ள் 1500 வரையான அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 500 வரையான பொலீசாரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே மக்கள் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் எதிர்காலத்தின் 5 ஆண்டு காலங்களில் என்ன மாற்றத்தினை எதிர்பாக்கின்றீர்களோ அவ்வாறானவர்களுக்கு உங்கள் விரும்பம் கொண்டவர்களுக்கு உங்கள் வாக்கினை இட்டு வன்னியில் புதிய மாற்றத்தினை கொண்டுவாருங்கள்..

கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பாராளுமன்றம் சென்றவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சிந்தித்துபாருங்கள் உங்கள் ஒவ்வொரு வாக்கும் பெறுமதிமிக்கது மாற்றம் ஒன்றினை வேண்டிய புதிய ஐனாதிபதியின் கீழ் மாற்றம் ஒன்றினை வேண்டிய மக்கள் எங்கள் மாவட்டத்தினை சுத்தம் செய்து புதிய முகங்களுக்கு வாய்பளித்து புதியவர்களை தெரிவுசெய்வதன் ஊடாக புதிய மாற்றத்தினை கொண்டுவரலாம்.

Admin Avatar