வன்னி மக்கள் தமிழர் தமிழருக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதிகளை உருவாக்கவேண்டும்-ப.உதயராசா!
வன்னியில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் தமிழ்மக்கள் அனைவரும் தமிழர்களுக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தினை உருவாக்கவேண்டும் என்று ஐனநாயக தேசிய கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.
ஐனநாயக தேசிய கூட்டணி கட்சி தபால் பெட்டி சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும் 26.10.2024 புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ப.உதயராசா தேர்தல் வந்தால் அனைவரும் மக்களை தேடி ஓடி வருவது இயல்பு பல கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் உதயராசாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் சந்தோசமாக இருந்தார்கள் தாங்கள் வெல்வோம் என பல கட்சிகள் பல சுயேட்சைக்குழுகள் இருந்தன எங்களின் முயற்சியால் அந்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
உதயராசா இல்லை என்றால் தாங்கள் வெல்வோம் என்று கூறி இருந்த ஒவ்வொரு கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும், இன்று போட்டி இடுவதில் இருந்து விலத்திக்கொள்ளவேண்டும்,ஏன் என்றால் நாங்கள் வந்துள்ளோம் நிச்சயமாக நீங்கள் தோற்கப்போகின்றீர்கள்
இன்று போதைக்கு இளைஞர்கள் அடிமையாகிவருகின்றார்கள் விவசாய நிலங்கள் வனவளத்திணைக்களத்தினர் எல்லைகற்களை போட்டு தடுக்கின்றார்கள்.
ஒரு இனத்தின் தேசியம் காக்கப்படவேண்டியது தார்மீக பொறுப்பு அபிவிருத்திகளை செய்யவேண்டியதும் கடமை ஆனால் கடந்த காலத்தில் பிரித்து வைத்திருந்தார்கள் அரசுடன் அமைத்து இணைந்து அமைச்சர்களாக இருந்தவர்கள் தேசியம் பேசமுடியாது அவர்களுக்கும் தேசியத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று.
ஒரு இனத்தின் பிரச்சினை பேசும் போது ஏனைய இனங்கள் கிண்டல் செய்கின்றார்கள்.
புத்த விகாரையினை மாற்றினம் அழிக்க நினைத்தால் அல்லது உடைக்க நினைத்தால் ஐனாதிபதி தட்டிக்கேட்கின்றார் ஆனால் எங்கள் ஆட்கள் அப்படி அல்ல டக்ளஸ் தேவானந்தாவாக இருந்தால் அவர் அரசு சார்ந்தவர் சம்மந்தன் ஜயாவாக இருந்தால் அவர் தேசியம் சார்ந்தவர் அது பொய்யான போலியான தேசியம் இன்று அது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
வீடு சங்காகி மானாகி வருகின்றது வடமாகாணா தேர்தலில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மானில் வருகின்றார் ஆனால் அன்று பேசியது இழந்த உயிர்களை தவிர அனைத்தினையும் தருவேன் பிரபாகரன் வடிவில் விக்னேஸ்வரன் ஜயா.. இப்ப மானாக வந்து நிக்கின்றார் அது என்னன்று புலி மானாக வரும்.
அரைவாசி வீடு சங்காக வந்துள்ளது தமிழ்மக்களுக்கு எல்லாம் செய்துவிட்டு இனி சங்கு ஊதுவதுதான் மிச்சம்.
மாவை சேனாதிராசாச காலையில் சஜித்திற்கு ஆதரவு மதியம் முறுகண்டியில் சங்குக்கு ஆதரவு பின்னேரம் வீட்டில் ரணிலுக் ஆதரவு இது உண்மையான தேசியமா போலித்தேசியமா?
சஜித்பிரேமதாசாவினை ஆதரிக்கின்றோம் என்று கிழக்கில் சொல்கின்றார் தெற்கில் சஜித்பிரேமதசா சொல்கின்றார் தனது தந்தையினை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொண்டார்கள் என்று பாருங்கள் எப்படிப்பட்ட தேசியம் என்று சுமந்திரன் சொல்கின்றார்.
இவ்வாறான தேசிய வாதிகளை நம்பினால் ஒட்டுமொத்த தமிழினத்தினையும் சிதைத்துத்தான் விடுவார்கள்.
எல்லா நிர்வாகத்தினையும் கட்டிக்காத்த இனம் இன்று சின்னாபின்னமாகி சங்கு,வீடு,மான் என்று வருகின்றார்கள் அதனை விட பல சுயேட்சைக்குழுக்கள்
06 பாராளுமன்ற உறுப்பினர்களை எடுப்பதற்கு நானூறுக்கும் அதிகமான வேட்பாளர்கள் அனுரகுமார திசநாயக்க நல்லாய் செய்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள் ஆனால் அவர் இந்த நாட்டிற்கான தலைவராக இருக்கலாம் என்னை பொறுத்தமட்டில் அவர் தமிழினத்திற்கான தலைவர் கிடையாது அதனை புரிந்து கொள்ளவேண்டும்.
அவர் ஊழல்கள் செய்தவர்களை தண்டிக்கின்றார் அவர் நல்லவர் என்று சொல்கின்றார்கள் நல்ல நாட்டினை கட்டிக்காப்பார் என்று சொன்னால் அதில் ஒரு பிரதிநிதிகளாக நாங்கள் இருப்போம் ஆனால் தமிழ்மக்களின் ஒரு பிரதிநிதகளாக ஜே.வி.பியின் பிரதிநிதிகளாக அல்ல திசைகாட்டி எங்களுக்குரியதல்ல அதனை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்
வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக நினைவு கொள்ளுங்கள் உங்களின் வாக்கு ஒரு தமிழருக்கு செல்லவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.