மன்னாரில் மழைவெள்ளத்தினால் 1898 குடும்பங்கள் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் இன்று 24.10.24  அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக 1898 குடும்பங்களை சேர்ந்த 7223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
பாதிக்கப்பட்ட குடும்ப விபரங்களை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது

இவ்வாறான பாதிப்புக்குட்பட்டவர்களில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 336 பேர் மூன்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தேங்கி நிற்கின்ற வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் அரச திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான குளம் உடைப்பெடுத்துள்ளது.
இராணுவம் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் உடைப்பு அடைக்கப்பட்டுள்ளது

தற்போது மழை வீழ்ச்சி குறைவடைந்தபடியால் வெள்ள நீர் படிப்படியாக குறைவடைந்து வருகின்றது
நாளைய  25.10.24 தினம் பாடசாலைகள் வழமைபோன்று நடைபெறும் என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Admin Avatar