சுயேட்சைக்குழுவின் முதன்மை வேட்பாளரின் கட்சி அலுவலகம் திறப்பு!
வன்னியில் சுயேட்சைக்குழு 7இல் கோடாரி சின்னத்தில் போட்டியிடும் எமில்காந்தன் தலைமையிலான அணியினரின் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகம் வவுனியா மாவட்டத்தில் இன்று 24.10.24 மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூவரசங்கும் பகுதியில் அமையப்பெற்ற முதன்மை வேட்பாளரின் அலுவலகத்தினை வேட்பாளர் எமில்காந்தன் அவர்கள் நாடவினை வெட்டி திறந்துவைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் வன்னி தேர்தல் களத்தில் சுயேட்சைக்குழு 7இல் போட்டியிடும் போட்டியிடும் முன்மை வேட்பாளர் எமில்காந்தனுடன் வேட்பாளர்களான மரியாம்பிள்ளை சாந்தகுணசிங்கம்,தேவராசா சிவராசா,பொ.சிந்தாத்துரை உள்ளிட்ட வேட்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.