Monday, April 28, 2025
HomeUncategorizedபணம் கட்ட காலம் இருந்தும் மின்சாரத்தினை துண்டித்த ஊழியரால்  பரபரப்பு!

பணம் கட்ட காலம் இருந்தும் மின்சாரத்தினை துண்டித்த ஊழியரால்  பரபரப்பு!

மின்சார கட்டணம் கட்டுவதற்கான கால அவகாசம் தொலைபேசியில் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்பட்டு காலம் இருந்து அதனையும் பொருட்படுத்தாது இரு வணிக நிலையங்களுக்கு மின்சாரத்தினை துண்டிக்கும் ஊழியரால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் இரு வணிக நிலையங்களுக்கு எதிர்வரும் 29.10.2024 ஆம் திகதி வரை மின்சாரம் கட்டுவதற்கான கால அவகாசம் உள்ளது என மின்சார சபையின் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தும்

22.10.2024 இன்று மின்சாரத்தினை துண்டிக்கும் ஊழியர் ஒருவர் வந்து மின்சாரத்தினை துண்டித்ததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மின்சார சபையின் இவ்வாறான செயற்பாட்டினை வணிகர்கள் இருவரும் வன்மையாக கண்டித்துள்ளார்கள்.

நாட்டில்  எத்தனையோ கோடிக்கணக்கில் மின்சார பட்டியலை கட்டாமல் பல அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள் பாமரமக்களின் வயிற்றில் இவ்வாறு செய்வதால் பணிகர்கள்பாதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments