ஆசிரியரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன்!

13 ஆண்டுகளாக ஒரோ பாடசாலையில் கடமையாற்றி வரும் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவன்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலத்தில் 13 ஆண்டுகளாக கல்வி கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவரின் செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு நீதி கோரி மனுக்கொடுத்துள்ளார்கள்.

குறித்த பாடசாலையில் 13 கலைப்பிரிவில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் சிரேஷ்ட மாணவத்தலைவராகவும் செயற்பட்டுவரும் சிவகுமார் சிவகரன் 20 வயது பிரிவு எறிபந்தாட்ட போட்டியில் இணைத்துக்கொள்ளாது குறித்த ஆசிரியர் ஒருவரினால் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இதற்கான விசாரணைகளை முன்னெடுத்து நீதியினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறித்த மாணவன் 2023 ஆம் அண்டு மாகாணமட்ட போட்டி,தேசியமட்ட எறிபந்தாட்ட போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றிருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு போட்டியில் குறித்த மாணவனை புறந்தள்ளிவிட்டு ஆசிரியர் ஒருவரின் தனிப்பட்ட செல்வாக்கினை பயன்படுத்தி வேறு ஒரு மாணவனை அணியில் இணைத்துக்கொண்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

விளையாட்டில் திறமையினை வெளிக்காட்டிய மாணவரின் விளையாட்டில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை உடற்கல்வி ஆசரியரான குறித்த ஆசிரியரின் இடமாற்ற செயற்பாட்டிற்கு ஒத்துளைப்பு வழங்காத காரணத்தினால் இந்த மாணவன் புறக்கணிக்கப்பட்டு இந்த மாணவனின் இடத்திற்கு பாடசாலையினை விட்டு இடைவிலகிய மாணவனை போட்டியில் பங்கு பற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் இவ்வாறு ஒரு ஆண்டுகள் பாடசாலையினை விட்டு இடைவிலகிய மாணவனை போட்டியில் பங்கு பற்ற அனுமதித்திருந்தார்

இது குறித்து கடந்த 21.08.2024 அன்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளதுடன் 27.09.2024 அன்று புதிய வடமாகாண ஆளுனருக்கு தபால் மூலம் முறைப்பாடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு விளையாட்டில் திறமையான மாணவனின் உரிமை மறுக்கப்பட்மை தொடர்பில் வடமாகாண கல்வித்திணைக்களத்தின் மீது சரியான விசாரணையினை முன்னெடுத்து நீதியினை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Admin Avatar