முல்லைத்தீவு கடற்கரையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு!
சர்வதேச சிறவர் தினமான 01.10.2021 அன்று முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
முல்லைத்தீவு கோவில்குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் கர்மேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம் முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் கொண்டாடப்பட்டுள்ளது
இந்த நிகழ்வில் பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன் சிறுவர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பிலான கருத்தரங்குடன் சிறுவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கபட்டுள்ளது.
