தேசிய மல்யுத்த போட்டியில் அதிக பதங்களைப் பெற்ற முல்லைத்தீவு மாவட்டம்!

2024 ம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மல்யுத்த போட்டியில் அதிக பதங்களைப் பெற்ற வடக்கின் முல்லைத்தீவு மாவட்டம்.

27,28,29,30/9/2024 கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் கல்வியமைச்சின் பாடசாலைகளுக்கான தேசிய மல்யுத்த போட்டியில் வடக்கின் மல்யுத்த தேசிய போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் மாணவர்கள் தங்க பதக்கம் 1 வெள்ளிப் பதக்கம்4 வெண்கலப் பதக்கம்7 ஆக மொத்தமாக 12 பதக்கங்களை முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் தமதாக்கினர்.

மு/ பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம்

20 வயதுப் பிரிவு

  1. சு. பவித்திரா (57kg) – தங்கப் பதக்கம்
  2. ர. டியாழினி (55kg) – வெண்கலப் பதக்கம்
  3. ம. கயாத்திரி (47kg) – வெண்கலப் பதக்கம்
  4. செ. அஜித்தா (50kg) – வெண்கலப் பதக்கம்

மு/ வித்தியானந்த கல்லூரி

20வயதுப் பிரிவு

  1. ஜெ. வினோஜன் (61kg) – வெள்ளிப் பதக்கம்
  2. சி. மதீஷன் (57kg) 61kg) – வெண்கலப் பதக்கம்
  3. ஜெ. கஜந் (65kg) – வெண்கலப் பதக்கம்
  4. பு. ரிபிசன் (80kg) – வெண்கலப் பதக்கம்

மு/ கலைமகள் வித்தியாலயம்.

18 வயதுப் பிரிவு
சி. புவியரசி (57kg) – வெண்கலப் பதக்கம்

மு/ பாண்டியன்குளம் விநாயகபுரம்
GTMS.

16 வயதுப் பிரிவு
வி. சைன்சிகா (46kg) – வெள்ளிப் பதக்கம்

Admin Avatar

More for you