நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி வெளிநாட்டவரிடம் இலஞ்சம் பெற்று வசித்து வந்த வீட்டில் புகுந்து தன்மீது தாக்குதல் மற்றும் பொலிஸாரின் உடந்தையுடன் தன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சுமத்துகிறார்.
குறித்த விடயம் சிவில்க் கேஸ் பொலிஸார் நேரடியாகத் தலையிடமுடியாது. முறைப்பாட்டின்்அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும். மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரியமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டின்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.
அத்துடன் பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்ப்போது வீடு திரும்பியுள்ளேன்.
பொலிஸாரின் இவ் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், பொலிஸ் மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும்்முறையிட்டைள்ளேன். மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் இந்த நடவடிக்கையானதை இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு எதிராக செயற்படுவது தொடர்பில் அச்சமேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸார் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செய்படும் விதத்தை ஜனாதிபதி அடுரகுமார திஸநாயக்காவைச் சென்றடையும் வகையில் இதனை நான் வெளிக் கொணர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.