ஆனையிறவு சோதனை நிலையத்தில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்கள்!

4 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணையிறவு பகுதியில் நேற்று (25)இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சாப் பொதி மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கஞ்சாவை கடத்திய 18 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த குறித்த இருவரையும் சோதனையிட்ட போது கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Admin Avatar

More for you