முல்லைத்தீவு குமுழமுனையில் கந்தசாமி பத்மநாதன் அணுசரணையுடன் மாவட்ட விளையாட்டு துறையின் வழிநடத்தலில் குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழக ஒழுங்கு படுத்தலில் பாரிய நீச்சல் போட்டி நடைபெறவுள்ளது.
இன்றைய இளையேரை இனம்கானல் ஊக்குவித்தல் திறனை விருத்தி அவர்களை நல்வழிப்படுத்தும் நேக்காக இந்த போட்டிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீச்சல் போட்டித் திறனை மேம்படுத்தும் நேக்குடன் மேற்படி போட்டிகளை முன்னாள் தேசிய மரதனேட்ட வீரரும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை வளர்சிக்கு பங்காற்றுபவருமான கந்தசாமி பத்மநாதன் அவர்கள் அனுசரணையுடன் குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் ஆலய நீர்த்ததடாக கேனியில் மேற்படி நீச்சல் போட்டிகள் குமுழமுனை ஐக்கிய விளையாட்டு கழகத்தினரின் ஒழுங்குபடுத்தல்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலயத்தின் கேணி பாரியளவில் சுமார் 40 அடி நீளம் கொண்ட கேணி புலம்பெயர் கிராமமக்களால் ஆலய நிர்வாகத்தினரின் ஒழுங்கு படுத்தலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது வயதெல்லை இன்றியதாக முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் போட்டியில் பங்குபற்றலாம்.
பதிவுகளை மேற்கொள்வதற்காக தொடர்புகளுக்கு
சுதாலதன் தலைவர் ஐக்கிய விளையாட்டு கழகம் 0770898781இ 0774652323.