16/8/2024 முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வயது பிரிவு ஆண் பெண் இருபலாருக்குமான மாபெரும் மரதனோட்ட போட்டி முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு பிரிவின் ஒழுங்குபடுத்தலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
16/8/2024 காலை 6.30 மணியளவில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்களால் கொடி அசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த மரதனோட்ட நிகழ்விற்கு பூரண நிதியனுசரணை குமுழமுனையை சேர்ந்த முன்னாள் தேசிய மரதனோட்ட வீரனும் தற்போது கனடா நாட்டில் வசிப்பவருமான கந்தசாமி பத்மநாதன். வழங்கியிருந்தார்.
ஆண்களுக்கான மரதனோட்ட ம் 24 KM கொண்டதாக அமைந்ததுடன் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயம் முன்பாக நிறைவடைந்தது.
பெண்களுக்கான மரதனோட்டமானது 16KM கொண்டதாக அமைந்ததுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி குமுழமுனை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நிறைவடைந்தது இப் போட்டியை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஆரம்பபித்து வைத்தார்.
ஆண்கள் பிரிவில்
முதலாம் இடத்தினை முத்தயன்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த J. விதுசன் 2 ம் இடம் J. அன்பரசன் 2ம் இடம் U. சுபராற் என்ற வீரனும் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை உடையார்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த N. கேமா என்ற வீராங்கனையும் 2ம் இடத்தினை A. அனித்தா 3ம் இடத்தை
S. விதுஷா பெற்றுக்கொண்டனர்.
இந்த அரை மரதனோட்டப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்