முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை 4 படகுகள் 8 மீனவர்கள் கைது!
19.04.23 முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையான கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நாயாற்று கடற்பரப்பில் வைத்து 4 படகுகளுடன் 8 மீனவர்களை கடற்தொழில்நீரியல் வளத்திணைக்களம் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த வலியுறுத்தி 17.04.23 அன்று மாவட்டட மீனவர்கள் கடற்படை தளத்திற்கு முன்பாக போராட்டம் மேற்கொண்டு கடற்படையினருக்கு மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.
இந்த நிலையில் கடற்படையினர் மற்றும் கடற்தொழில்நீரியல் வளத்திணைக்களம் ஆகியன இணைந்து மீனவர்களின் ஒத்துளைப்புடன் நாயாற்று கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 பாடகுகளையும் 8 மீனவர்களையும் கைதுசெய்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 6 மீனவர்கள் புல்மோட்டை பகுதியினை சேர்ந்தவர்கள் என்றும் கொக்குளாய் பகுதினை சேர்ந்தவர் ஒருவரும்,கறுக்குப்பனை பகுதியினை சேர்ந்த ஒருவரும் படகுகுளுடன் கைதுசெய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது மீனவர்கள் 8 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்களிளன் சான்று பொருட்கள் நீதிமற்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தின் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துளைப்பு வழங்க தயார் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் எஸ்.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடரவேண்டும் எனவும் தெரிவித்த அவர்
கடற்படையினரும் திணைக்களமும் சேர்ந்து 4 படகுகளை கைதுசெய்துள்ளார்கள் இந்த நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கும் கடற்படையினருக்கும் 25 படகுகளை வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் நாங்கள் தயாரா இருக்கின்றோம்
இன்று படகினை பிடித்துவிட்டு பின்னர் நான்கு மாதங்களுக்கு பின்னர் படகினை பிடிக்காமல் கடற்படையினர் தொடர்ந்து சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.