நீராவியடிப் பிள்ளையார் ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் 

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த  பொங்கல் உற்சவம் இன்று! ஆலய பூசகர் உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் 

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசாரி உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம்(23) கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினர் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மத முரண்பாட்டினை தோற்றிவிக்கும் வகையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த மதவாத போக்கு கொண்ட சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி மதமுரண்பாட்டினை தோற்றிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.


இவ்வாறு மதவாத போக்கு கொண்டவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை விவகாரம்,நீராவியடிபிள்ளையார் ஆலய விவகாரங்கள் மத இன முரண்பாடுகளை கடந்த காலங்களில் தோற்றிவித்துள்ளன.


நாட்டில் இன மத நல்லிணக்கம் என்று சொல்லப்பட்டு செயற்பட்டுவரும் அரச திணைக்களங்கள், இவ்வாறனவர்களை சரியாக இனம் கண்டு அவர்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் அத்துடன் இலங்கை அரசின் புலனாய்வு அமைப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் புலனாய்வு அமைப்பினரும் இவ்வாறான முரண்பாடுகளை தோற்றிவிப்பவர்கள் தொடர்பில் நடவடிக்ககை எடுக்கவேண்டும்.

இதுதொடர்பில்  ஆலய பூசகர் நேற்று(23) மாலை ஊடகங்களுக்கு  தகவல் தெரிவிக்கையில்

நாங்கள் பொங்கல் வழிபாடுகளை செய்யும் வேளையில் பொலிஸ்  தரப்பினரும் இராணுவம் மற்றும் தொல்பொருள்  திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களால் இன்று (23) காலை தொடக்கம் இப்போதுவரை விசாரனை நடாத்தப்பட்டது. அது தொடர்பாக கேட்டபோது நாங்கள் சிவன் சிலை பிரதிஷ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.

இந்த வதந்தி பரப்பியவர்களை நாம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, நாங்கள் அப்படியான நிலையில் ஆலயத்தை வழிநடத்தவில்லை , எங்களுடைய மூல மூர்த்தியாக இருக்கும் விநாயகப்பெருமானை நாங்கள் மென்மேலும் வழிபட்டு வருகின்றோம். அவருடைய அருள் இருக்குமென்பதை சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன் 

எந்தவொரு சிலைபிரதிஷ்டை செய்வது வேறு எந்த விதமான நிலைமையும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து இவ்வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன் என்றார் அத்தோடு இன்று பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார்

இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் இவ்வாறு வதந்தி பரப்பி ஆலய உற்ச்சவத்தை குழப்ப சதி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

Admin Avatar