Tuesday, April 29, 2025
HomeUncategorizedகமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!

கமக்கார அமைப்பு செயலாளர் மீது துப்பாக்கிசூடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில்
24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார் இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார அமைப்பின் செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments