முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வர பெருமான் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற உற்சவம் இன்று (06) நடைபெற்றுள்ளது.
குறித்த மஹோற்சவ திருவிழாவானது, நேற்று (05.07.2024) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.
இதற்கமைய, பூஜை மற்றும் அபிஷேகங்கள் ஆகியன ஆலய உற்சவ பிரதம குரு சிவஸ்ரீ.கீர்த்திவாசக் குருக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் கீ .காருண்யசர்மா ஆகியோரின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும் அதே சமயம் அருகில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவிலிலிருந்து சுமார் 30 அடி நீளமான கொடி கம்பம் கொண்டுவரப்பட்டு கோபுர வாசலில் நடப்பட்டு அதில் நந்திக்கொடி பறக்க விடப்பட்டுள்ள அதே சமயம் காதலியார் சம்மளங்குளதில் இருக்கின்ற சிவன் கோயிலிலும் கொடியேற்றப்படும் .
இம்மூன்று நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் புதுமை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நிகழ்ந்து வருவது பாரம்பரியம்
அந்த வகையில் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாக்களில் முக்கியமாக இன்று கொடியேற்றம்-06.07.2024,திருவேட்டை உற்சவம் 18.07.2024,தேர்த்திருவிழா 20.07.204,தீர்த்தத்திருவிழா 21.07.2024 ஆகிய தினங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.