33000 கிலோவாட்ஸ் மின்கம்பிக்கு கிட்ட சென்றால் இழுத்தடிக்கும்!
இலங்கை மின்சாரசபையில் மக்களின் மின்சார பாவனைக்காக இணைக்கப்பட்டுள்ள 33000 கிலோ வாட்ஸ் இணைப்பு மின்கம்பிகளுக்கு கிட்ட செல்லும் போது அழு இழுத்து தாக்கும் என்ற விடையம் பலருக்கு தெரியாத நிலையில் புதுக்குடியிருப்பில் இருவர் இவ்வாறு அதியுயர் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் 26.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நகர் பகுதி ஊடாக மக்கள் பாவனைக்கான மின் இணைப்பு அதியுயர் அழுத்த மின் இணைப்பு உயரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நகரமயமாகும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பல வணிக நிலையங்கள் தங்கள் கட்டங்களை இரு மாடி கட்டங்களாக கட்டிவருகின்றார்கள் இவ்வாறு இரு மாடி கட்டத்திற்கான அனுமியினை பிரதேச சபையும்,மின்சாரசபையும் வழங்கவேண்டும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சுமார் 15 ற்கு மேற்பட்ட கட்டங்கள் இவ்வாறு இரு மாடிக்கட்டங்களாக இயங்கி வருகின்றன
பிரதேச சபையின் சுற்றிக்கை படி 33000 அதியுயர் அழுத்த மின்சார இணைப்பு கம்பியில் இருந்து மூன்று மீற்றர் சுற்றுவட்டத்திற்கு எந்த கட்டமும் இருக்கக்கூடாது என்பது நியதி இந்த நியதிக்கு அமைய பொறியிலாளர்களின் திட்டமிடல் வரைபடங்கள் ஊடாக கட்டிடத்திற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன ஆனால் பல கட்டிடங்கள் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அருகில் கட்டிவிடுகின்றார்கள்.
இந்த நிலையிலேயே உயர் மின்னழுத்த கம்பிக்கு அருகில் சென்ற இருவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது இதற்கு முன்னரும் புதுக்குடியிருப்பு பகுதியில் கட்டத்தில் நின்று உயர் மின்னழுத்த கம்பிக்கு பக்கத்தில் நின்று வாய்க்குள் தண்ணீர் விட்டு துப்பிய இளைஞர் ஒருவரும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இரண்டு மாடி கட்டத்தின் மேற்கூரையில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியினை சுத்திகரிக்க சென்ற 20 அகவையுடைய 8 ஆம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த கேசவன் என்ற இளைஞன் மின்சாரம் தாக்குதலுக்கு இலங்காகியுள்ளார்.
இவரை பார்க்க சென்ற 21 அகவையுடைய 1ம் வட்டாரம் கோம்பாபில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த றாஜ்குமார் என்ற இளைஞனும் மின்சாரதாக்குதலுக்கு இலக்காகி புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை அனுமிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இந்த மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.