முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவனை ஆசிரியர் ஓருவர் சரமானியாக கையால் தாக்குதல் நடத்தியதில் குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
இந்த சம்பவம் கடந்த 19.06.2024 அன்று முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் முல்லைத்தீவினை சேர்ந்த குறித்த மாணவன் மீது பாடசாலைக்குள் வைத்து ஆசிரியர் ஒருவர் கைகளால் சரமாரியாக கன்னங்களில் தாக்குதல் நடத்தியுள்ளார் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 23.06.2024 வரை சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் சரியான விசாரணையினை சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் முன்னெடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவுமகாவித்தியாலயத்தில் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன
குறித்த ஆசிரியர் தொடர்பிலான பின்னணி வாரிக்குட்டியூர் வவுனியாவினை சேர்ந்த ஆசிரியர் புவியியல் பாடத்தில் சிறப்பு தேச்சி பெற்ற ஆசிரியர் ஆவார் மாணவர்களுக்கு புவியியல் கற்பிப்பத்தில் சிறந்த ஆசானாக காணப்படும் இவர் தந்தை இல்லாத பிள்ளைகளின் வீடுகளில் பிரத்தியோக வகுப்பிற்கு சென்று வரும்போது பிள்ளைகளின் தாய்களுடன் தவறான தொடர்புகளை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது
மதுவிற்கு அடிமையான ஆசிரியராக இவர் பாடசாலையினை விட்டு வெளியில் காணக்கூடியதாக உள்ளது என்றும் இவ்வாறான செயற்பாடுகளால் இவரின் குடும்பத்தில் கூட பிரச்சினை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.
இவர் ஏற்கனவே தண்டனை இடம்மாற்றமாகவே இந்த பாடசாலைக்கு வந்துள்ளார் என்றும் கற்பித்தல் செயற்பாட்டினால் இவரது உந்துருளி மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டமையும் பிரதேச வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்
இவ்வாறான ஆசிரியர்களை பாடசாலை நிர்வாகம் சரியாக கவனிக்கவேண்டும் இல்லாவிடின் இவர்களுக்கான தட்டனையினை சரியா கொடுக்கவேண்டும் அதிகஸ்ரப்பட்ட பிரதேசங்களாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் கடமைக் காலங்களை ஈடுசெய்வதற்காக கடமையாற்றும் பல நல்ல உள்ளம் கொண்ட அரச அதிகாரிகள் மத்தியில் இவ்வாறனவர்கள் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.