Wednesday, April 30, 2025
HomeUncategorizedமுள்ளியவளை பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி!

முள்ளியவளை பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியள்ளமை தெரியவந்துள்ளது சிறுமியிடம் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுமியை கடந்த நான்காம் மாதம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது

 சிறுமியின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞனை இனம் காட்டிய சிறுமி தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இளைஞனை கைதுசெய்யும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்ட வேளை குறித்த இளைஞன் கிராமத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி உளநல சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியவளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments