Wednesday, April 30, 2025
HomeUncategorizedமுள்ளிவாய்க்கால் கடலில் அபிசாவளையினை சேர்ந்தவர் உயிரிழப்பு!

முள்ளிவாய்க்கால் கடலில் அபிசாவளையினை சேர்ந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில்  கடற்றொழில் நடவடிக்கையில்  ஈடுபட்ட அவிசாவளையை  சேர்ந்த நபர் உயிரிழப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே இன்று(02) காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த  நபர் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார் 

கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென கடலுக்குள்  மூழ்கி உயிரிழந்துள்ளார் உயிரிழந்த நபர் அவிசாவளை  பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான  சிவனு சிவகுமார் என்பவராவார்

குறித்த நபரின் உடலத்தை இன்று(02) மாலை வருகை தந்து பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos உடலத்தை உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் 

அத்தோடு குறித்த நபருடைய வழக்கு விசாரணை எதிர்வரும் 4 .7 .2024 முல்லைத்தீவு திறந்த நீதிமன்றத்தில் இடம்பெறும் எனவும் எனவே இது தொடர்பான சாட்சியமளிக்க உள்ளவர்கள் அந்த இடத்தில் சாட்சியம் அளிக்கலாம் எனவும் தெரிவித்தனர் 

தற்போது உடலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments