முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் 

முன்னாள் போராளிகள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று  (01) முள்ளியவளையில் இடம்பெற்றது 

பல்வேறு அமைப்புகளாக இயங்கி வருகின்ற முன்னாள் போராளிகள் அமைப்புகளை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் அமைப்புகள் சாராத முன்னாள் போராளிகள் என சுமார் 200 போராளிகள் கலந்து கொண்டு  கலந்துரையாடலில்  ஈடுபட்டனர்

நாட்டில் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கி வருகின்ற சவால்கள் தொடர்பாகவும் அது தொடர்பில் எவ்வாறு தாங்கள்  பணியாற்ற முடியும் என்பது தொடர்பிலும் அவர்களுக்கு தாங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகள் தேவைப்பாடுகள் தொடர்பிலும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது 

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் போராளிகளின் நலன்கள் சார்ந்து அனைவரும் ஒற்றுமையாக பயணிக்கும்  வகையில் குறித்த  கலந்துரையாடல்  அமைந்தது 

மதத் தலைவர்கள் ஆசியுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சி போராளிகள் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் போராளிகள் போராளிகள் நலனபுரிச் சங்க போராளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த போராளிகளும் அமைப்புகள் சாராத போராளிகள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்

Admin Avatar