வடக்கு மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைதீவு பெண்கள் அணி சாதனை!
வடக்கு மாகாண பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 5 நிறைப்பிரிவுகளில் 5 நிறைப்பிரிவுகளில் தங்கம் வென்று முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி 1ம் இடத்தை பெற்று சாதனை
கடந்த 25,26 சனி ஞாயிறு முல்/ வித்தியானந்தா கல்லூரி உள்ளக அரங்கில் வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களதினால் நடத்தப்பட்ட வடக்கு மாகாண குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 5 நிறைப்பிரிவுகளில் 5 இல் தங்க பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பெண் முதல் நிலைபெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்
. இவ் நிகழ்வில விருந்தினராக வடமாகாண மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமைப் பீடம் S.சதானந்த் அவர்களும், விருந்தினராகவும் நிகழ்வின் வைத்திய ராகவும் மாவட்ட வைத்திய அதிகாரி (MO/Planning) Dr.K.சுதர்சன் அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.
பெண்கள் அணியில் முல்லைத்தீவு மாவட்டம்-
தங்கம் – 5, வெள்ளி- 1 வெண்கலம் – 3 பெற்று முதல் இடத்தினையும்
வவுனியா மாவட்டம்-3வெள்ளி 2வெண்கலம் ,
கிளிநொச்சி மாவட்டம், வெண்கலம் – 1 பதக்கங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்
இந்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக உடையார்கட்டு, இரணைப்பாலை புதுக்குடியிருப்பு , செல்வபுரம், உண்ணாப்பிலவு, கரைச்சிக்குடியிருப்பு, உடுப்புக்குளம், அளம்வில்,, தண்டுவான், பழம்பாசி கற்சிலைமடு கரிப்பட்ட முறிப்பு , மாங்குளம், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் முதலான கிராமங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.