Tuesday, April 29, 2025
HomeUncategorizedமுள்ளியவளையில் இளம் பெண் கொலை கணவர் உள்ளிட்ட மூவர் கைது!

முள்ளியவளையில் இளம் பெண் கொலை கணவர் உள்ளிட்ட மூவர் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் 23 அகவையுடைய இளம் குடும்ப பெண்  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்துவந்த வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 அகவையுடை இளம் குடும்பபெண் தனது கணவருடன் பூதன்வயல் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

26.05.2024 அன்று வீட்டில் கிணற்றில் குறித்த குடும்பபெண் விழுந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் பொலீஸ் நிலையம் சென்றுள்ளநிலையில் பொலீஸ் வரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் வீழ்ந்த பெண்ணை மீட்டு உழவு இயந்திரத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

பெண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் இன்று 27.05.2024 உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை குறித்த பொண் கொலைசெய்யப்பட்டுள்ளதான சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் முள்ளியவளை பொலீசாரால் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் கணவருடன் வாழ்ந்துவந்த நெடுங்கேணியினை சேர்ந்த மற்றும் ஒரு பெண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட முவரையும் கைதுசெய்துள்ளார்கள்.இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார்ஈடுபட்டுள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments