முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் ஏற்பாட்டில் 59 ஆவது படைப்பரிவினர் ஏற்பாடு செய்த வெசாக் பண்டிகை நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இதில் சிறப்பாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகளில் புத்தபெருமானின் வரலாற்றினை தமிழ் மொழியிலும் ஒலிக்க செய்து தமிழ்மக்களை ஈர்த்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தானமும் வழங்கிவைத்துள்ளார்கள்.வெசாக்கூட்டு திறப்பு நிகழ்வு இன்று(23) மாலை 6.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் இராணுவ தளபதிகள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் சிறுவர்கள், பெரியோர்கள் கலந்துகொண்டு வெசாக்வெளிச்ச கூடுகளை திறந்து வைத்துள்ளதுடன்
பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வெசாக் தினத்தினை கொண்டாடியிருந்தனர்.
வெசாக்தினத்தினை முன்னிட்டு இன்றும், நாளையும் (24) உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது