முல்லைத்தீவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் தலைமையில் பல திட்டங்கள் முன்னெடுப்பு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல பிரதிபலன்களை வழங்கும் வகையில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டம் வேலைத்திட்டம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று 03.05.24 காலை புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது.

அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு பல பிரதிபலன்கள் இதன்மூலம் கிடைப்பதுடன் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம் நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அனைவருக்கும் தமது தொழில் கனவுகளை நனவாக்கும் வகையில் ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிட்டத்தட்ட ஐம்பது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் வருகை தந்துள்ளன. இதற்கிடையில், இஸ்ரேலிய வேலைகளுக்கான பதிவு செய்யும் வேலைதிட்டமும் நடைபெற்றதுடன் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் வேலை தேடும் அனைவரும் இங்கு பதிவு செய்துக்கொண்டனர்.

இதேவேளை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், ஆட் கடத்தலை தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றையும் நேற்று நடைமுறைப்படுத்தியது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்களத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் இங்கு அறிவுறுத்தப்பட்டனர்.

முறைசாரா துறை பணியாளர்களுக்கு தொழில் கௌரவத்தையும் வளத்தையும் வழங்கும் கருசரு வேலைத்திட்டம் நேற்று மாலை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி நிதியத்தின் உதவியுடன் பயிற்சியுடன் கூடிய திறமையான பணியாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பை வழங்கும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் யூத் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிரம வாசனா நிதியத்தின் மூலம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டமும் இன்று மாலை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஆகும்.

Admin Avatar